நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்தடை தொடர்பான அறிக்கை அமைச்சர் டலஸ் இடம் கையளிப்பு

Rihmy Hakeem
By -
0

  

அண்மையில் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற மின் தடை தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்ட குழுவின் அறிக்கை மின்வலு அமைச்சர் டலஸ் அலகபெருமவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த அறிக்கை, ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்வலு அமைச்சின் மேலதிக செயலாளர் ஹேமந்த சமரகோன் தலைமையில் 9 பேர் கொண்ட குழு இந்த அறிக்கையை சமர்ப்பித்தது.

கெரவலப்பிட்டிய மின்நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 17 ஆம் திகதி மதியம் 12.30 மணி அளவில் நாடு பூராகவும் மின் தடை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)