முழு மன நிறைவுடன் தோனி வழியை தேர்ந்தெடுப்பதாக இந்திய அணியின் வீரர் சுரேஷ் ரெய்னா அறிவித்துள்ளார். சுரேஷ் ரெய்னா 226 ஒருநாள் போட்டிகள், 78 டி20 மற்றும் 19 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 226 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள சுரேஷ் ரெய்னா 5617 ஓட்டங்களை குவித்துள்ளார்.
இந்திய அணி வீரர்களான தோனி மற்றும் சுரேஷ் ரெய்னா இருவரும் வெளியிட்டுள்ள இந்த ஓய்வு அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.