பதவி விலக தயார் - அமைச்சர் டலஸ்

Rihmy Hakeem
By -
0


நாட்டில் ஏற்பட்ட மின் வெட்டுக்கு, மின் சக்தி அமைச்சே பொறுப்புக் கூற வேண்டும் என்று உறுதியானால் தான் அமைச்சுப் பதவியிலிருந்து விலகத் தயார் என்று மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை நாட்டில் ஏற்பட்ட திடீர் மின்வெட்டு தொடர்பில் ஆராய்வதற்கு மின் சக்தி அமைச்சினால் குழுவொன்று நியமிக்கப்பட்டது.

இந்த குழுவின் அறிக்கையானது நாளை மாலை மின் சக்தி அமைச்சிடம் கையளிக்கப்படவுள்ளது, இந்த அறிக்கையில் திடீர் மின்வெட்டுக்கு மின்சக்தி அமைச்சுதான் பொறுப்பு என்று மேற்கொள் காட்டினால் தான் உடன் பதவி விலகத் தயராகவுள்ளதாக டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது உரையாற்றுகையிலேயே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)