நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு

www.paewai.com
By -
0

பொதுத் தேர்தலை முன்னிட்டு  நாடளாவிய ரீதியில் அனைத்து  பாடசாலைகளுக்கும்  இன்று முதல்  எதிர்வரும்  நான்கு  நாட்களுக்கு  விடுமுறை  வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு  தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இன்று, நாளை, நாளை மறுதினம் மற்றும்  வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

நாடாளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளினதும் தரம்  11 ,12 மற்றும் 13 ஆகியவற்றுக்கான கல்வி  நடவடிக்கைகள் கடந்த  27   ஆம் திகதி   மீளவும்  ஆரம்பமானது.

இந்த நிலையில், பொதுத்தேர்தல் நடவடிக்கைகளுக்காக பாடசாலைகளுக்கு இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் சகல பாடசாலைகளிலும் கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள்  மாத்திரமே அனுமதிக்கப்படுவார்கள்  எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி  தரம் 5,  10, 11, 12 மற்றும் தரம் 13 ஆகிய வற்றுக்கான கல்வி நடவடிக்கைகள் வாரத்தில் ஐந்து நாட்களும்  முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவைதவிர  தரம் 1, 2, 3  மற்றும் தரம் 4 ஆகியவற்றுக்கான கல்வி நடவடிக்கைகள் நடவடிக்கைகள் வாரத்தில் ஒரு நாள் மாத்திரமே முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)