ராஜபக்ச சகோதரர்களுக்கு சர்வதேச ஊடகங்களில் குவியும் பாராட்டுக்கள்!

Rihmy Hakeem
By -
0

 

பொதுத் தேர்தலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு கிடைத்த வெற்றியை சர்வதேச ஊடகங்கள் பாராட்டி எழுதியுள்ளன.

சில ஊடகங்கள் இந்த வெற்றியை ராஜபக்ஷவின் சுனாமி என வர்ணித்துள்ளன. இது குறித்து விரிவான வகையில் தத்தமது ஊடகங்களில் முக்கிய இடமளித்து எழுதியுள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை அமோக வெற்றியை நோக்கி வழிநடத்தியுள்ளார்கள் என அந்த ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

கடந்த காலத்தில் சர்ச்சைக்குரிய கட்டுரைகளை எழுதிய நியுயோர்க் ரைம்சின் மரியா அல் அப் என்ற கட்டுரையாளர், இலங்கை அரசாங்கம் ஏற்படுத்திய ஸ்திரத்தன்மையை பொதுத் தேர்தலில் மக்கள் அங்கீகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பிபிசி, சி.என்.என், அல்-ஜசீரா, நியுயோர்க் ரைம்ஸ், வோஷிங்டன் போஸ்ட், பீப்பல்ஸ் டெய்லி, ரஷ்யா ருடே முதலான செய்தி நிறுவனங்களும் இலங்கையின் தேர்தல் குறித்து செய்திகளை வெளியிட்டுள்ளன.

இந்தியாவின் நியுஸ் எயிட்டீன் இணையத்தளம் எழுதிய விமர்சனத்தில், தாமரை மொட்டின் மூலம் யானையொனறு; வீழ்த்தப்பட்டுள்ளதாக குறிப்பிபட்டுள்ளது. இந்தியாவின் 

த ஹிந்து, ரைம்ஸ் ஒவ் இந்தியா, என்.டி.ரிவி, ஹிந்துஸ்தான் ரைம்ஸ் முதலான பல ஊடகங்கள் இலங்கையின் பொதுத் தேர்;தல் பற்றி விரிவான விமர்சனங்களை எழுதியுள்ளன. இலங்கை மக்கள் வலுவான தலைமைத்துவத்திற்கும், நிலையான அரசாங்கத்திற்குமாக வாக்களித்துள்ளார்கள் என அவை குறிப்பிட்டுள்ளன.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)