ஞானசார தேரரின் பேஸ்புக் முடக்கப்பட்டதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Rihmy Hakeem
By -
0

 

(எம்.மனோசித்ரா)

ஞானசார தேரர் உள்ளிட்ட சில பௌத்த மதத் தலைவர்களது முகநூல் கணக்கு முடக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று திங்கட்கிழமை கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

மக்கள் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அமைப்பினைச் சேர்ந்த இரு நபர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இதன் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், முகப்புத்தக நிறுவனம் ஞானசார தேரர் உள்ளிட்ட பல பௌத்த மதத் தலைவர்களது முகப்புத்தக பக்கத்தை முடக்கியுள்ளன. இவற்றில் ஞானசார தேரருடைய முகப்புத்தக கணக்கும் உள்ளடங்குகிறது.

இவ்வாறு முகப்புத்தக கணக்குகள் முடக்கப்படுவதால் ஞானசார தேரர் பற்றி ஊடகங்களில் பிரசுரிக்கப்படும் செய்திகளைக் கூட பகிர முடியாமல் உள்ளது. எனவே இவ்வாறான செயற்பாடுகளை முகப்புத்தக நிறுவனம் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டனர்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)