20 இற்கு எதிராக 18 மனுக்கள் : ஆராய்வதற்கு 5 நீதியரசர்கள்

Rihmy Hakeem
By -
0


 பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட 20வது திருத்த வரைபினை சவாலுக்குட்படுத்தி உயர் நீதிமன்றில் மேலும் ஆறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதன் மூலம் 20 ஆவது திருத்த வரைபிற்கு எதிராக இதுவரை மொத்தம் 18 மனுத்தாக்கல்கள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுத்தாக்கல்கள் மீதான பரிசீலனை செப்டெம்பர் 29 ஆம் திகதி உயர் நீதிமன்ற நீதியரசர்கள் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இந் நிலையில் இந்த பரீசிலனை நடவடிக்கைக்காக ஐவர் கொண்ட உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாமொன்றும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)