ரணிலிடம் 5 மணி நேர வாக்குமூலம்!

Rihmy Hakeem
By -
0

 


அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் வைத்தியர் நிஹால் ஜயதிலக தாக்கல் செய்துள்ள மனுவொன்றின் பிரதிவாதியாக ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு முன்னாள் பிரதமருக்கு அழைப்பாணை வௌியிடப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இன்று காலை அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகி இருந்தார்.

சுமார் 5 மணி நேரம் வாக்குமூலங்கள் வழங்கிய பின்னர் அவர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் போது செயற்படுத்தப்பட்ட தேசிய நிறைவேற்று சபையின் தீர்மானம் காரணமாக தான் அரசியல் பழிவாங்கலுக்கு ஆளானதாக குறித்த மனுவில் ஜயதிலக குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் நல்லாட்சி அரசாங்கத்தின் 15 அமைச்சர்கள் இதற்கு முன்னர் ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Adaderana 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)