சாதாரண தர பரீட்சையில் 9ஏ சித்தி பெற்ற மாணவன் சடலமாக மீட்பு!

Rihmy Hakeem
By -
0

 


அம்பலாங்கொடை பிரதேச பிரபல பாடசாலையொன்றின் உயர்தர வகுப்பு மாணவரொருவர் பலபிட்டிய குறுக்கு சந்தி கடற்கரையில் சடலமாக (23) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பலப்பிட்டிய - பத்தேகம பிரதேசத்தை சேர்ந்த 17 வயது மாணவரான இவர் சென்ற வருடம் நடைபெற்ற சாதாரண தர பரீட்சையில் 9ஏ சித்திகளைப் பெற்றவர் எனவும் விஞ்ஞான பிரிவில் படித்து வந்தவர் எனவும் தெரியவருகிறது. 

குறித்த மாணவரை கடந்த இரு தினங்களாக காணவில்லை என்று பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ள நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும். மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும பொலிஸார் தெரிவித்துள்ளனர்.. 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)