"தேசியப்பட்டியல் விடயத்தில் SLPP அநீதியிழைத்துள்ளது : சுதந்திர கட்சி அதனுடனான கூட்டணியை மறுபரிசீலனை செய்யக்கூடும்"

Rihmy Hakeem
By -
0

 


ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து கூட்டணியமைத்த சில கட்சிகளுக்கு  பொதுத் தேர்தலுக்கு பின்னர் தேசியப் பட்டியல் பெயரிடுவதில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக  ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரான பேராசிரியர் ரோஹண லக்ஷமன் பியதாச தெரிவித்துள்ளார்.

கண்டியில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிடுகையில், அமைச்சரவை நியமனத்தில் கூட்டணியின் ஏனைய கட்சிகளின் கருத்துகளை கருத்துகளை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கேட்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

கூட்டணியை இவ்வாறான முறையில் நடத்திச்செல்வதாக இருந்தால் அது மிகவும் வருத்தத்துக்குரிய விடயம் என்றும் ரோஹண லக்ஷமன் பியதாச சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன்,  தொடர்ச்சியான கருத்து வேறுபாடுகள் காரணமாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியானது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடனான கூட்டணியை மறுபரிசீலனை செய்யக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

(தமிழ் மிரர்)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)