ஊரடங்கு உத்தரவு அமுலிலுள்ள பிரதேச மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்க நடவடிக்கை - கம்பஹா மாவட்ட செயலாளர்

Rihmy Hakeem
By -
0

 


தற்போது கம்பஹா மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள வெயாங்கொட, திவுலப்பிட்டிய, மினுவாங்கொட ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பிரதேசங்களில் வசிக்கும் மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப்பொருட்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு, பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக, கம்பஹா மாவட்ட செயலாளர் சுனில் ஜயலத் தெரிவித்துள்ளார்.

மேற்படி பிரதேசங்களில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்குத் தேவையான உலர் உணவுப்பொருட்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேவையேற்படின் கடந்த காலங்களைப் போல், உலர் உணவுப்பொருள்களை கிராம மட்டங்களுக்கச் ​சென்று, விநியோகிக்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)