அடையாங்காணப்படும் தொற்றாளர்கள் குறித்து தொற்றுநோய் விஞ்ஞான பிரிவின் விசேட வைத்தியர் விளக்கம்

Rihmy Hakeem
By -
0

 


நாடு முழுவதிலும் சில இடங்களில் அடையாங்காணப்படும் கொவிட் - 19 தொற்றுக்குள்ளானவர்கள் மினுவாங்கொடை பிரன்டிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிவர்களுடன் நெருக்கமாக தொடர்புட்டவர்கள் என்று தொற்றுநோய் விஞ்ஞான பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பில் இந்த ஆடைத் தொழிற்சாலையின் கொரோனா கொத்தணி காரணமாக இந்த வைரஸ் சமூகத்தொற்றாக மாறியுள்ளதா என்பது தொடர்பில் எதிர்வரும் சில தினங்களிலேயே தெளிவாக புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நேற்றைய தினம் 6000 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், இவர்களுள் பெரும்பாலானோர் மினுவாங்கொடை கொவிட்- 19 கொத்தணியுடன் தொடர்புபட்டவர்கள் என்று தெரிவித்த அவர் இதுவரையில் நாடு முழுவதிலும் 220,000 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

கொவிட் நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக உள்ள கட்டில்களின் எண்ணிக்கையை 2,000 ஆக அதிகரிப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேவைப்படும் பட்டசத்தில் அதனை 3.000 ஆக அதிகரிப்பதற்கு சந்தர்ப்பம் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

அரசாங்க தகவல் திணைக்களம்

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)