ஊழியர் சேமலாப நிதி (EPF) : விண்ணப்பபடிவங்களை ஏற்றுக்கொள்ளுவது குறித்து அறிவிப்பு

Rihmy Hakeem
By -
0

 


ஊழியர் சேமலாப நிதியத்தின் பயன்களுக்கான விண்ணப்பபடிவங்களை ஏற்றுக்கொள்ளுவது தொடர்பாக தொழில் ஆணையாளர் நாயகம் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

குறித்த அறிக்கை:

தற்போது நிலவும் கொவிட் வைரஸ் நிலைமையின் கீழ் சுகாதார பாதுகாப்புடனான சேவையை வழங்குவதற்காக ஊழியர் சேமலாப நிதியத்தின் பயன்களுக்கான விண்ணப்பபடிவங்களை ஏற்றுக்கொள்ளும் பணியை அருகாமையில் அமைந்துள்ள தொழில் அலுவலகத்தின் மூலம் மாத்திரமே மேற்கொள்ளும் நடவடிக்கையை 2020.10.26 ஆம் திகதி தொடக்கம் முன்னெடுக்கும் வகையில், அதற்கான திகதியையும், நேரத்தையும் தொலைபேசியின் மூலம் முன்பதிவு செய்து கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக கொழும்பு மாவட்டத்திற்குள் அங்கத்தவர்கள் பயன்களுக்கான விண்ணப்பத்தை ஒப்படைப்பதற்காக கீழ் கண்ட தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு திகதியையும், நேரத்தையும் முன்பதிவு செய்துகொள்ளுமாறு தயவுடன் அறியத்தருகின்றோம்.



உங்களுக்கு அருகாமையில் உள்ள தொழில் அலுவலகத்தின் தொலைபேசி இலக்கத்தை அறிந்துகொள்வதற்கு www.labourdept.gov.lk  என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசியுங்கள்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)