அவதானம் : அத்தனகல்ல ஓயாவில் குளிக்க சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

Rihmy Hakeem
By -
0
நேற்று முன்தினம் (06) அத்தனகல்ல ஓயாவுக்கு சென்ற ஒருவர் இன்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

43 வயதுடைய குறித்த நபர் மனவளர்ச்சி குன்றியவர் எனவும் தெரியவருகிறது. அத்தனகல்ல, ஹுணுபொல - ஹால்பந்தனிய பிரதேசத்தை சேர்ந்த நபர் இவர் அருகிலுள்ள அத்தனகல்ல ஓயாவுக்கு நேற்று முன்தினம் குளிப்பதற்காக சென்றுள்ளார்.

அங்கு மேலாடைகளை வைத்து விட்டு குளித்துக்கொண்டிருக்கும் போது  நீரில் மூழ்கி இறந்துள்ளதாகவும், அவரது சடலம் இன்றைய தினம் (08) கம்புராகல்ல பிரதேசத்திற்கு அருகில் கிடைத்துள்ளதாகவும் தெரியவருகிறது. 

இந்நிலையில் ஸ்தலத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

தற்போது அத்தனகல்ல ஓயாவில் நீரின் வேகம் அதிகமாக இருப்பதாகவும், குழிகளும் ஆங்காங்கு இருப்பதால் குளித்தல் மற்றும் மீன்பிடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 





கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)