வீட்டினுள் கொரோனா மரணம் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை

www.paewai.com
By -
0


கொரோனா தொற்றுக்குள்ளாகி வீட்டினுள் உயிரிழப்புக்கள் ஏற்படுவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தனியார் ஊடக நிறுவனமொன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் கொரோனா தொற்றுக்குள்ளான நபர்களை இனங்காண நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)