23 வயதான நீரிழிவு நோயாளர் கொவிட் தொற்று காரணமாக மரணம்! இலங்கையில் 30வது மரணம் பதிவானது!

Rihmy Hakeem
By -
0

 


இலங்கையில் கொரோனா வைரசு தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது.

இதுதொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்ட ஊடக அறிக்கை பின்வருமாறு:

இலங்கையில் பதிவான 30 ஆவது கொவிட் 19 வைரசு தொற்றுக்குள்ளானவரின் மரணம் சற்று முன்னர் இடம்பெற்றதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன அவர்கள் உறுதி செய்தார்.

நேற்று முன் (05) தினம் மரணமான இந்த நோயாளி அங்கொட தேசிய தொற்று நோயில் பிரிவில்; சிகிச்சை பெற்றுவந்த 23 வயதுடைய முகத்துவாரம், கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்த ஆண் நபராவார்.

இந்த மரணத்திற்கு காரணமாக சம்பந்தப்பட்ட நோயாளிக்கு நீரிழிவு நோய் பிரச்சினையுடன் கொவிட்19 வைரசு தொற்றும் ஏற்பட்டதாகும்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)