ஜனாதிபதி இன்னும் பெயில் இல்லை : இந்நிலை தொடர்ந்தால் அவர் பெயிலாகி விடுவார் - சபையில் சாணக்கியன் (வீடியோ)

Rihmy Hakeem
By -
0

 


தேசிய இனப்பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வினை வழங்கினால். வெளிநாடுகளில் உள்ள தமிழ் முதலீட்டாளர்கள் மீண்டும் நாட்டிற்கு வந்து முதலீடுகளை மேற்கொள்வார்கள் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

வரவு செலவுதிட்டம் மீதான இரண்டாவது வாசிப்பின் மூன்றாம் நாள் விவாதம் இன்று இடம்பெற்றது. விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் 83 கலவரத்தினைத் தொடர்ந்து நாட்டை விட்டுச்சென்றவர்கள் நாட்டுக்கு திரும்பிவர வேண்டுமாயின் முதலில் அவர்களுக்கு இங்கு வாழ்வதற்குமுடியும் என்ற எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.

என்னிடமும் பல்வேறு திட்டங்கள் இருகின்றன. அவற்றினை செயற்படுத்துவது குறித்து நாங்கள் பேசுவோம். அவற்றினை செயற்படுத்துவோம். நானும் பரிந்துரைகளை முன்வைக்க தயாராகவே உள்ளேன்.

உண்மையாக இங்கு இருக்கின்றவர்கள்  ஜனாதிபதி, பெயில் என்றும். பாஸ் என்றும் பேசுகின்றார்கள். ஜனாதிபதி இன்னும் பெயில் இல்லை. ஏனென்றால் ஒரு வருடம் தான் கடந்துள்ளது. இன்னும் 4வருடங்கள் இருக்கின்றன. இந்நிலைய தொடர்ந்தால் ஜனாதிபதி பெயில் ஆகிவிடுவார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)