ரயில் நிலையத்தில் "சைனீஸ்" பலகை குறித்து சமூக வலைத்தளம் மூலமே அறிந்து கொண்டேன் : யார் பொருத்தியது என்று தெரியாது - ரயில்வே பொது முகாமையாளர்

Rihmy Hakeem
By -
0

 


கல்கிஸ்ஸ ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள அறிவித்தல் பலகையொன்றில் இலங்கையின் தேசிய மொழிகளான தமிழ், சிங்களம் என்பன தவிர்க்கப்பட்டு ஆங்கிலமும் சீன மொழியிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விடயத்துடன் தொடர்புடைய புகைப்படமானது சமூக வலைத்தளத்தில் பதிவிடப்பட்ட பின்னரே, தான் இது தொடர்பில் அறிந்து கொண்டதாக இலங்கை ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் டிலந்த பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

குறித்த அறிவிப்பு பலகையானது தான் பொதுமுகாமையாளராக வருவதற்கு முன்னரே பொருத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த அறிவிப்பு பலகையை பொருத்தியதற்கான பொறுப்பு யாருடையது என்பது குறித்து, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். (TM)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)