துந்துவ-இந்துரவ பிரதேசத்தில் மரண சடங்கில் கலந்து கொண்ட 10 பேருக்கு கொரோனா!

Rihmy Hakeem
By -
0

 


காலி மாவட்டத்திலுள்ள இந்துரவ-துன்துவ பிரதேசத்தில் இடம்பெற்ற மரணச் சடங்கொன்றில் கலந்துகொண்ட 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக, காலி மாவட்ட தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. 

மேற்படி பிரதேசத்தில் 45 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை மூலம் 10 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேற்படி மரணச் சடங்கில் பேருவளை மற்றும் அளுத்கமை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றுள்ளனர் எனவும் தெரியவந்துள்ளது. 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)