தேர்தல் ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்கள் இன்று முதல் தடவையாக கூடுகின்றனர்

Rihmy Hakeem
By -
0

 


தேர்தல் ஆணைக்குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய உறுப்பினர்கள் இன்றைய (17) முதன்முறையாக கூடவுள்ளனர்.

எதிர்வரும் 2021 வருடத்திற்கான வாக்காளர் இடாப்பு தயாரித்தல் உள்ளிட்ட சில விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், தேர்தல்களில் முன்கூட்டியே வாக்களித்தல் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கும் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்குதல் உள்ளிட்ட விடயங்களும்ஆராயப்படவுள்ளதாகவும், தேர்தல் செலவினங்களைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்ட சட்டமூலங்களை  பாராளுமன்ற ஒப்புதலுக்காக சமர்ப்பிப்பது குறித்தும் தேர்தல் ஆணைக்குழு கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)