கடவத்தை - மீரிகமை அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப்பணிகளை துரித கதியில் நிறைவு செய்ய நடவடிக்கை

Rihmy Hakeem
By -
0

 


கடவத்தையில் இருந்து மீரிகம வரையான அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகள் துரிதகதியில் நிறைவு செய்யப்படுமென அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கடந்த காலப் பகுதியில் இந்த நிர்மாணப் பணிகள் மந்தகதியில் இடம்பெற்றதாகவும் இதனால் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

சில வீதி அபிவிருத்திப் பணிகளுக்கு பொருத்தமற்ற ஒப்பந்தக்காரர்களை நியமித்ததன் காரணமாக அந்த வேலைத்திட்டம் தாமதமடைந்தது.

நிறைவு செய்யப்படாத வேலைத்திட்டங்களின் ஒப்பந்தக்காரர்களை நீக்கிவிட்டு அதனை முழுமைப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மேலும் கூறினார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)