18 பேருக்கு கொரோனா : தல்துவ கிராம சேவகர் பிரிவும் லொக்டவுன் செய்யப்பட்டது!

Rihmy Hakeem
By -
0

 



தெஹியோவிட்ட சுகாதார வைத்திய அதிகார பிரிவுக்கு உட்பட்ட தல்துவ கிராம உத்தியோகத்தர் பிரிவு இன்று (19) மதியம் தனிமைப்படுத்தப்பட்டது.

தல்துவ பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் போது 72 இல் 18 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்ட காரணத்தால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, கீழ் தல்துவ கிராம உத்தியோகத்தர் பிரிவை சேர்ந்த அனைவரும் தமது வீடுகளிலேயே தங்கியிருக்க வேண்டும் எனவும் விற்பனை நிலையங்களை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெஹியோவிட்ட சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஐராஜ் கமகே தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)