இன்று முதல் 04 நாட்களுக்கு மோட்டார் சைக்கிள் சோதனை தொடர்பில் விசேட அவதானம்

Rihmy Hakeem
By -
0

 


மோட்டார் சைக்கிள் விபத்துகளை குறைப்பதற்கு இன்று(31) முதல் நான்கு நாட்களுக்கு விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ஆரம்பகிக்கப்படவுள்ளது.

இதன்போது, மோட்டார் சைக்கிள் சோதனை தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்படும் என, பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களால் மேற்கொள்ளப்படும் வீதி ஒழுங்கு விதிமுறைகள் மீறப்படுகின்றமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் விசேட அவதான செலுத்தப்படவுள்ளது.

இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் வாகன விபத்துகள் காரணமாக 8 பேர் உயிரிழந்துள்ளதாக  பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார். (Siyane News)

தமிழ் மிரர் 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)