23 நாடுகள் பங்குபற்றிய Virtual Kaya Karate போட்டியில் கஹட்டோவிட்ட பத்ரியா மாணவர் ஸாயித் வெண்கலப்பதக்கம் வென்றார்!

Rihmy Hakeem
By -
0

 


கஹட்டோவிட்ட, ஓகொடபொல பிரதேசத்தை சேர்ந்த எம்.ஆர்.எம்.ஸாயித் சுமார் 23 நாடுகள் கலந்து கொண்ட 11 வயதின் கீழ் சர்வதேச Virtual Kaya Karate போட்டியில் ஒன்லைன் மூலமாக தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி சர்வதேச ரீதியில் மூன்றாவது இடத்தை தனதாக்கிக்கொண்டு வெண்கலப்பதக்கத்தை வென்றுள்ளார்.

கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலயத்தில் தரம் 06 இல் கல்வி பயிலும் ஸாயித், கடந்த வருடம் நடைபெற்ற தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையிலும் 163 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவரது தந்தை எம்.எச்.எம்.ரம்ஸான் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் இயங்கும் "Sri Lanka Karate-Do Federation" இன் பயிற்றுவிப்பாளர் என்பது விசேட அம்சமாகும்.

குறித்த போட்டியில் முதல் மூன்று இடங்களையும் இலங்கையை சேர்ந்த மாணவர்களே பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

தன்னுடயை திறமை மூலம் பாடசாலைக்கும் ஊருக்கும் நாட்டுக்கும் பெருமையை தேடிக்கொடுத்த ஸாயிதிற்கு பாடசாலை அதிபர் எம்.ஏ.எம்.அஸாம் உட்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். (RH)



கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)