கராபிடிய வைத்தியசாலைக்கு ஐக்கிய மக்கள் சக்தியினால் ரூ.27 இலட்சம் பெறுமதியான High Flow Nasel Oxygen System வழங்கி வைப்பு!

Rihmy Hakeem
By -
0

 கராபிடிய வைத்தியசாலைக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் 'எதிர்க்கட்சியிலிருந்து ஒரு மூச்சு'

கராபிடிய வைத்தியசாலைக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் 'எதிர்க்கட்சியிலிருந்து ஒரு மூச்சு' திட்டத்தின் ஓர் அங்கமாக சஜித் பிரேமதாசாவின் எண்ணக்கருவை அடிப்படையாகக் கொண்டு நாடு முழுவதும் ஆரோக்கியமான ஓர் தேசத்தை உருவாக்குவதை இலக்காகக் கொண்ட 'ஜன சுவய' திட்டத்தின் 13 ஆவது கட்டமாக ரூ.2,700,000 இலட்சம் மதிப்புள்ள மருத்துவமனை உபகரணங்கள் நன்கொடையாக இன்று(16) காலி காரப்பிடிய வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டன.எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவால் கராபிடிய வைத்தியசாலையின் பனிப்பாளர் வைத்திய அதிகாரி டப்ளியு.ஏ.எம்.ஷெல்டன் பெரேராவிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதன்படி,ரூ.1,35,0000 மதிப்புள்ள High Flow Nasel Oxygen System இரண்டு வழங்கி வைக்கப்பட்டன.

கொரோனா பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுகாதார நிவாரணம் வழங்குவதற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற குழு, அமைப்பாளர்கள், உறுப்பினர்கள்,கட்சியின் வெளிநாட்டு கிளைகள், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஆதரவாளர்கள் இனைந்ததாக "ஜன சுவய" திட்டம் மற்றும் "எதிர்க்கட்சியிலிருந்து ஓர் மூச்சு" திட்டத்தை செயல்படுத்துகின்றன. 

(Siyane News)







கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)