மீண்டும் முழு நேர பயணத்தடை! (விபரம்)

Rihmy Hakeem
By -
0

 


நாட்டில் கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்காக மே 21 ஆம் திகதி வௌ்ளிக்கிழமை இரவு 11 மணி தொடக்கம் மே மாதம் 25 ஆம் திகதி செவ்வாய்கிழமை அதிகாலை 4 மணி வரையும் நாடளாவிய ரீதியிலான பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இது தவிர மே 25 செவ்வாய்கிழமை இரவு 11 மணி முதல் மே 28 வௌ்ளி அதிகாலை 4 மணி வரை மற்றுமொரு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் பயணத் தடை விதிக்கப்படும் காலப்பகுதியில் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களின் போக்குவரத்திற்கு எவ்வித தடையும் இல்லை எனவும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மேலும் தெரிவித்தார்.

(Siyane News)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)