எரிபொருள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஸ், டிரக்டர், புல்டோசர், முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்களில் பாராளுமன்றத்திற்கு வருகை தந்த எதிர்க்கட்சி எம்பிக்கள்!

Rihmy Hakeem
By -
0

 எண்ணெய் விலை அதிகரிப்பால் மக்களுக்கு ஏற்ப்பட்டுள்ள பாதிப்பிற்கு  எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று(22) கோட்டேயிலுள்ள கட்சித் தலைமைகத்திலிருந்து பாராளுமன்றம் வரை வாகன பேரனியாக சென்றனர்.

இந்த எதிர்ப்பு நிகழ்வு எதிர்க் கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச தலைமையில் இடம் பெற்றது.

இதன்போது எம்பிக்கள் பஸ், டிரக்டர், மோட்டார் சைக்கிள், புல்டோசர், முச்சக்கர வண்டி போன்ற வாகனங்களிலும் கால்நடையாகவும் பாராளுமன்றம் நோக்கி சென்று எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 (Siyane News)











கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)