இலங்கையில் இருந்து ஆயுதக்குழு ஒன்று நுழையவுள்ளதாக தகவல் : தமிழ் நாட்டில் பாதுகாப்பு அதிகரிப்பு!

Rihmy Hakeem
By -
0

 


இலங்கையிலிருந்து ஆயுத குழுவொன்று இந்தியாவுக்குள் நுழைய முற்படுவதாக, அந்நாட்டின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய, தமிழ்நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டு பொலிஸாரும் மத்திய புலனாய்வு பிரிவினரும் இதுகுறித்து மிகுந்த அவதானத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதுவரை குறித்த ஆயுத குழு எது என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை

குறித்த ஆயுத குழு இந்தியாவுக்குள் நுழைய முற்படுவதாக கடந்த சனிக்கிழமை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், கன்னியாகுமரி, தூத்துகுடி,ராமேஸ்வரம் மற்றும் சென்னை ஆகிய நகரங்களில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவித்துள்ளன. 

(Tamil Mirror)


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)