ரஜப்' என்றொரு பிறை..... - கவிஞர் காவூர் ஜமால்

Rihmy Hakeem
By -
0

 


'ரஜப்' என்றொரு பிறை.....

***********************

கஹட்டோவிட்ட ஈன்றெடுத்த முத்தொன்று

  காணாமல் போன காதை என்னென்று சொல்வேன்

இவ்வூரில் கால் பதித்த நாள் முதலாய்

  கவர்ந்  தென்னைக் காதலித்த மாணவனே

                  ############

மர்ஹூம் 'ஸாலிஹ்' மனங்கவர்ந்த தம்பதியின்

மாசில்லா மைந்தனே.... மகனே 'ரஜப்'..

எத்தனை சோதனை எத்தனை வேதனை..!

அத்தனையும் நீ பொறுத்து 'அல்லாஹ்' வின் அருள் பெற்றாய்..!

                ##############

நித்தமும் பேசிடுவாய் நின் புன்னகையோ ஒரு கவிதை

சத்தியமாய்ச் சொல்லுகிறேன் 'சரித்திரம் 'நீ படைத்துவிட்டாய்..!

படிப்பாலே ஓர் இயந்திரன் பண்பாலே ஓர் இந்திரன்..

அன்பாலே எனை ஈர்த்த 'தந்திரன்' நீ மகனே..!

                 ##############

மக்களுக்கு உதவிடும் மகத்தான மனம் கொண்டாய்

இத்தரை மாந்தரின் இரக்கமே பெற்றிட்டாய் 

'ஆண்டவன் 'கட்டளை அனுதினம் செய்திட்டாய்

அனைவரின் உள்ளத்தை அன்பாலே வென்றிட்டாய்..!

                 ##############

அவனியில் பிறந்ததை பேறென நினைத்தாய்

பெருமிதம் கொண்டு பிள்ளைகள் பெற்றாய்

உலகில் உதித்து பிறையாய் வளர்ந்தாய்

இன்று தேய்ந்து இல்லாமல் போனாய்...!

                  #############

     உன் அன்பு ஆசான்.... 

      கவிஞர் காவூர் ஜமால்

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)