கொவிட் தடுப்பூசியின் இரு டோஸ்களையும் பெற்றுக்கொண்டவர்களுக்கு கம்பஹா மாவட்ட அரச அலுவலகங்களில் முன்னுரிமை!

Rihmy Hakeem
By -
0

(ரிஹ்மி ஹக்கீம்)

கொவிட் தடுப்பூசியின் இரு டோஸ்களையும் பெற்றுக்கொண்டவர்கள் கம்பஹா மாவட்டத்திலுள்ள அரச காரியாலங்களில் சேவைகளை பெற்றுக் கொள்ளும் போது அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று கம்பஹா மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சஹன் பிரதீப் விதான தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் ஆலோசனையின் பிரகாரம் மாவட்ட செயலாளருடன் கலந்தாலோசித்து எடுக்கப்பட்ட இத்தீர்மானத்தின் அடிப்படையில், கொவிட் தடுப்பூசியின் இரு டோஸ்களையும் பெற்றுக்கொண்டவர்கள் அது தொடர்பில் வழங்கப்பட்ட அட்டையினை அரச காரியாலயங்களுக்கு செல்லும் போது காண்பிப்பதன் மூலம் அவர்களுக்கு சேவையில் முன்னுரிமையினை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். (Siyane News)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)