(ரிஹ்மி ஹக்கீம்)
இன்று (11) காலையுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் கம்பஹா மாவட்டத்தில் 2,000 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக கம்பஹா மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலக தரவுகள் தெரிவிக்கின்றன.
அதிகபட்சமாக மினுவாங்கொடை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் 240 தொற்றாளர்களும், மஹர சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் 236 தொற்றாளர்களும், பியகமை மற்றும் சீதுவை ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுகளில் தலா 220 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தவிர ஏனைய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுகளில் பின்வரும் எண்ணிக்கையில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வத்தளை - 186, மீரிகமை - 156, கம்பஹா - 143, அத்தனகல்ல - 130, களனி - 123, ஜா எல மற்றும் கடான - தலா 106, ராகமை - 45, நீர்கொழும்பு - 43, தொம்பே - 36 மற்றும் திவுலபிடிய - 20
(Siyane News)