அத்தனகல்ல பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 20 - 30 வயதுப்பிரிவினருக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை 06 முதல் ஆரம்பம்!

Rihmy Hakeem
By -
0

 


(ரிஹ்மி ஹக்கீம்)

அத்தனகல்ல பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 20 - 30 வயதுகளுக்கு இடைப்பட்டோருக்கு சைனோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் எதிர்வரும் 06 ஆம் திகதி முதல் வழங்கி வைக்கப்படவுள்ளதாக அத்தனகல்ல பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், எதிர்வரும் 06 ஆம் திகதி நிட்டம்புவ சங்கபோதி வித்தியாலயம் மற்றும் ஊராபொல மத்திய மகா வித்தியாலயம் ஆகியவற்றில் 20 - 30 வயதுகளுக்கு இடைப்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக அத்தனகல்ல பிரதேச செயலகம் மேலும் தெரிவித்துள்ளது.

(Siyane News)


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)