கம்பஹா - மினுவாங்கொடை புதிய வீதி ஊடாக கம்பஹா நகருக்கு அண்மித்ததாக செல்லும் அத்தனகல்ல ஓயாவில் சுமார் 15 அடி நீளமான இராட்சத முதலை ஒன்று இருப்பதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
அதனை பார்ப்பதற்காக பெரும் எண்ணிக்கையிலான மக்கள் அங்கு சென்றுள்ளதுடன், அந்தளவு பெரிய முதலை ஒன்றை இதுவரை தாம் பார்த்ததில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த முதலையினால் ஏதாவது தீங்குகள் ஏற்படலாம் என்பதால் அதனை அங்கிருந்து அப்புறப்படுத்த வனவிலங்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். (Siyane News)
வீடியோ - https://youtu.be/j51q8gefuWk