எந்த முறைப்பாடு, என்ன வகை விசாரணை என்று குறிப்பிடாமல் எதிர்க்கட்சி எம்பியை விசாரணைக்கு அழைத்துள்ள சிஐடி!

Rihmy Hakeem
By -
0

 


ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணாயக்காரவை விசாரணைக்காக சிஐடி  இன் கணனி தடயவியல் பிரிவால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 எனினும் எந்த முறைப்பாடு ? எந்த வகையிலான விசாரணை என்று குறிப்பிடப்படவில்லை என்பதனால் அது குறித்த சட்ட ஆலோசனை தேவைப்படுவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் ஆலோசனை மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணிகளான திசத் விஜயகுணவர்தன, பார்மன் காசிம் ஆகியோரின் சட்ட ஆலோசனையினை தொடர்ந்து மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். (Siyane News)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)