கொழும்பில் 50 இற்கும் மேற்பட்ட முக்கிய நிலங்கள் குத்தகைக்கு விடப்படவுள்ளன - நகர அபிவிருத்தி அமைச்சு

Rihmy Hakeem
By -
0

 


கொழும்பு நகரம் மற்றும் அதற்கு வெளியிலுள்ள 50 இற்கும் மேற்பட்ட முக்கிய நிலங்கள் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு குத்தகைக்கு விடப்படவுள்ளதாகவும் அதன் மூலம் குறைந்தது 06 பில்லியன் அமெரிக்க டாலர்களை திரட்ட எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

குறித்த நிலங்கள் பொது - தனியார் கூட்டுப்பங்காண்மை அடிப்படையில் அல்லது 51% பங்குகளை அரசாங்கம் வைத்திருக்கும் முயற்சியின் அடிப்படையில் வழங்கப்படும் என்று நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சிறிநிமல் பெரேரா தெரிவித்துள்ளதாகவும் குறித்த ஆங்கில ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது. (Siyane News)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)