Al Hima ஒருங்கிணைப்பில் குவைத் Islamic Care Society மூலம் வத்துபிட்டிவலை வைத்தியசாலைக்கு திரவ ஒட்சிசன் கொள்கலன் கையளிப்பு!

Rihmy Hakeem
By -
0

வத்துபிட்டிவலை ஆதார வைத்தியசாலையின் கோரிக்கைக்கு அமைவாக, கஹட்டோவிட்ட அல் ஹிமா நிறுவனத்தின் ஒருங்கிணைப்பில், குவைத் Islamic Care Society இன் நன்கொடை மூலம் குவைத் தூதுவரின் வழிகாட்டலின் கீழ் கொவிட் தொற்றாளர்களுக்காக நிறுவப்பட்ட  திரவ ஒட்சிசன் கொள்கலன் இன்று (27) வைத்தியசாலையின் தலைமை வைத்திய அதிகாரி எம்.ஐ.சிராஜ் இடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. 

3000 லீட்டர் கொள்ளளவுடைய அதன் பெறுமதி 90 இலட்சம் ரூபா ஆகும்.

நிகழ்வில் இலங்கைக்கான குவைத் பிரதித்தூதுவர் அப்துல் அஸீஸ் அல் அதவானி, கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உபுல் மஹேந்திர ராஜபக்ச உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், அல் ஹிமா நிறுவனத்தின் தலைவர் அல்ஹாஜ் நூருல்லாஹ், குவைத் தூதரக உத்தியோகத்தர் பிர்தவ்ஸ், தலைமை வைத்திய அதிகாரி எம்.ஐ.சிராஜ் உள்ளிட்ட வைத்தியசாலை உத்தியோத்தர்களும் கலந்து கொண்டனர். (Siyane News)












கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)