கிண்ணியா - குறிஞ்சாக்கேணி சோகம் : மற்றுமொரு சிறுமி உயிரிழப்பு!

Rihmy Hakeem
By -
0

 ஹஸ்பர் ஏ ஹலீம்

கிண்ணியா, குறிஞ்சாக்கேணி பகுதியில் கடந்த 23ஆம் திகதி இடம்பெற்ற படகு பாதை விபத்தில் பாதிக்கப்பட்டு, திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி ஒருவர், இன்று (28) உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறிஞ்சாக்கேணி பகுதியைச் சேர்ந்த எஸ்.நிபா என்ற 6 வயதுச் சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம்,  திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் தற்போது வைக்கப்பட்டுள்ளது.

சடலத்தை, உறவினர்களிடம் கையளிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதோடு, விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)