ஜேவிபியுடன் கூட்டணியா? தயாசிறியின் கருத்து தொடர்பில் லசந்த தெளிவு

Rihmy Hakeem
By -
0

 


தம்முடைய கட்சிக்கு மக்கள் விடுதலை முன்னணியுடன் கூட்டணி வைத்து செயற்பட முடியும் என்று ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ள கருத்து அவருடைய சொந்த கருத்தாகும் எனவும் கட்சியினுடைய கருத்து அல்ல எனவும் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார்.

கம்பஹா மாவட்டம், அத்தனகல்ல பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்தே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி  சகல தீர்மானங்களையும் கட்சியின் தலைமை, மத்திய செயற்குழு உள்ளிட்ட அனைவரும் இணைந்தே எடுப்பதாகவும், மக்கள் விடுதலை முன்னணியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பில் இதுவரை கலந்துரையாடப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார். (Siyane News)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)