கார்தினல் மல்கம் ரஞ்சித்தை சந்தித்து நத்தார் வாழ்த்துக்களை தெரிவித்த சர்வ மதத்தலைவர்கள்

Rihmy Hakeem
By -
0

  ஐ. ஏ. காதிர் கான்

   நத்தார் கிறிஸ்துமஸ் தினத்தைக் கொண்டாடும் அனைத்து கிறிஸ்துவ சகோதர மக்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதற்காக, கர்தினால் மல்கம் ரஞ்சித் அவர்களை சர்வமதத் தலைவர்கள் (25) சந்தித்தனர்.

   இதன்போது, பௌத்தம், ஹிந்து மற்றும் இஸ்லாம் ஆகிய சர்வமதத் தலைவர்கள், தங்களது கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை அவர்களிடம் தெரிவித்துக் கொண்டனர்.

   இந்நிகழ்வில், சப்ரகமுவ பல்கலைக் கழக வேந்தர் பேராசிரியர் கௌரவ கும்புருகமுவே வஜிர நாயக்க தேரர், கௌரவ கட்டுகஸ்தொட்ட உபரதன நாயக்க தேரர், சிவ ஸ்ரீ சுப்பிரமணியம் குருக்கள், அல் - ஹாஜ் அஸ் - ஸெய்யித் கலாநிதி ஹஸன் மௌலானா அல் - காதிரி மற்றும் சர்வமதக் கூட்டமைப்பின் தேசிய இனைப்பாளர் அல் - ஹாஜ் முஹியிதீன் காதர் ஆகியோர் கலந்து கொண்டனர்.







கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)