நாட்டில் உணவுத்தட்டுப்பாடு ஏற்படாது - விவசாய பணிப்பாளர் நாயகம்

Rihmy Hakeem
By -
0

 நாட்டில் எந்தவித உணவு தட்டுப்பாடும் ஏற்படாது என்று விவசாய பணிப்பாளர் நாயகம் கலாநிதி அஜந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டு சிறுபோக உற்பத்தி நடவடிக்கைகள் வெற்றிகரமாக இடம்பெறுகின்றன. இந்த போகத்தில் பொதுவாக 4.3 தொன் நெல் அறுவடை  எதிர்பார்க்கப்படுகின்றது.

கனிம உரம் பயன்படுத்தப்பட்டு சிறுபோக உற்பத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.  அடுத்த வருடம் முதல் மனை உற்பத்தி திட்டத்தை ஊக்குவிப்பதற்கான வேலைத்திட்டம் பொதுமக்கள் மத்தியில் முன்னெடுக்கப்படவுள்ளது.

வீட்டுத்தோட்டத்தின் மூலம் பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்வதே நோக்கமாகும் என்று விவசாய பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)