எரிபொருள் பிரச்சினை தொடர்பில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பிரதானிகள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தலைவர்களுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எரிபொருள் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான யோசனைகள் மற்றும் ஆலோசனைகளைப் பெறுவதே இந்த கலந்துரையாடலின் முக்கிய நோக்கம் என்று அறியமுடிகிறது.
புதிய அமைச்சரவை நியமனத்தின் பின்னர் எரிபொருள் மற்றும் எரிவாயு பிரச்சினைக்கு தீர்வு காண்பதே அரசாங்கத்தின் பிரதான நோக்கமாக உள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Tamilmirror