இம்முறை சிங்களவர்களால் சர்வேதேச சமூகத்தை ஏமாற்ற முடியாமல் போய்விட்டது.
கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக பாம்புக்கு தலையையும் மீனுக்கு வாலையும் காட்டி வாழும் விலாங்கு மீனின் தந்திரத்தில் சிங்கள அரசியவாதிகள் வெற்றி பெற்று வந்திருக்கிறார்கள். உள்நாட்டில் என்ன அநியாயத்தை செய்தாலும் ராஜதந்திரத்தின் மூலம் சர்வேதேசத்தை ஏமாற்றுவதில் அவர்கள் தொடர்ந்தும் வெற்றிகண்டு வந்திருக்கிறார்கள், ஆனால் அவர்களின் முகத்திரைகள் கிழிக்கப்பட்டு இன்று உலகத்தின் முன் நிர்வாணமாய் நிற்பது தெரிகிறது.
இந்த நாடு ஏன் இந்த நிலைக்கு வந்தது என்ற கேள்விக்கு, ஊழலு வீண் விரையமும்தான் காரணம் என்று வெளிப்போக்கில் கூறப்பட்டாலும், சிங்கள பெளத்த மேலாதிக்க மனப்பான்மையும் இனவாதமுமே முக்கிய காரணம்.
இலங்கைக்கு உலகம் உதவப்போவதில்லை என்பது தெரிகிறது. அது கொழும்பு அரசியல் தலைமைக்கு தெளிவாக புரிய தொடங்கி இருக்குறது. ஒரு தூதுக்குவை அனுப்பி, ஒரு பிரதிநிதியை அனுப்பி இனியும் உலக நாடுகளை ஏமாற்றி, நல்ல பிள்ளையாய் நடித்து காரியம் சாதிக்க முடியாது என்பது சிங்களவர்களுக்கு புரிய ஆரம்பித்துள்ளது.
"சர்வேதேசத்தின் மதிப்பை வெல்லக்கூடியவர்" என்று பிதற்றி கலத்தில் இறக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க, ஒரு செத்த பாம்பு என்பது இப்போது பலருக்கும் புரிந்திருக்கும். ஆங்கிலத்தில் பேசி டொலர் கொண்டு வரும் சூழ்நிலை இப்போது இல்லை-அந்த உலக ஒழுங்கு மாறி விட்டது.
இந்த நெருக்கடி, ஆட்களை மாற்றுவதால் -ஆங்கிலம் தெரிந்தவர்களை முன் வரிசையில் உட்கார வைப்பதால், முஸ்லீம் நாடுகளுக்கு முஸ்லீம் பிரதிநிதிகளை அனுப்பி உதவி கேட்பதால் எல்லாம் தீரும் கட்டத்தை தாண்டி விட்டது.
இலங்கைக்கு இந்த கட்டத்தில் உதவப்போவதில்லை என்று இலங்கையின் பாரம்பரிய நற்பு நாடுகளின் ஒன்றான ஜப்பானின் தூதுவர் தமிழ் அரசியல் தலைவர்களுடனான சந்திப்பும் ஒன்றில் கூறியதாக வெள்ளிக்கிழமை செய்தி வெளியாகி இருந்தது.
கடந்த ஒரு மாதமாக ஜனாதிபதி சந்திக்கும் வெளிநாட்டு பிரதிநிதிகள்-ரணில் விக்ரமசிங்க சந்திக்கும் அதிகாரிகள், அது அரபு நாட்டு பிரதிநிதி, IMF குழு -ஜப்பான் தூதுவர் என்று யாராக இருந்தாலும் ஒன்றையேதான் கூறிவிட்டு போகிறார்கள்.
" உங்கள் இந்த சிஸ்டதுக்கு நாம் உதவ போவதில்லை" அது வேறுபட்ட ராஜதந்திர மொழியில் கூறப்பட்டாலும் அவர்கள் சொல்வது ஒன்றுதான். அதாவது இந்த ஜனாதிபதி இந்த பாராளுமன்றம் இந்த புழுத்துப்போன "சிஸ்டம்" இருக்கும் வரை இனிமேல் எதுவும் கிடைக்காது.
ஆங்காங்கே வந்து சேரும் சில அவசர மனிதாபிமான உதவிகள் கூட சர்வேதேச அமைப்புக்கள் ஊடாகத்தான் வழங்கப்படுகிறேதே தவிர இலங்கை அரசாங்கத்துக்கு நேரடியாக பணத்தை வழங்க யாருமே தயாரில்லை என்பது தெரிகிறது.
பொலிஸாரிடனும் - ராணுவத்தினருடனும் மக்கள் நேரடியாக மோதலில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இது சட்டமும் ஒழுங்கும் முழுமையாக சீர்கெடுவதர்க்கான முதல் அறிகுறி.
போலீசார் மீது நம்பிக்கையோ மரியாதையோ அற்ற ஒரு சமூக அமைப்பில், அவர்களின் துப்பாக்கி மீது எவ்வளவு தூரம் மக்கள் பயப்படுவார்கள் என்பதற்கு ஒரு எல்லை இருக்குறது. தன் பிள்ளை பட்டினி சாவை எத்ர்கொள்ளும் போது, தாயை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பெட்ரோல் கிடைக்காத போது, போலீசாரின் மீதான அந்த பயம் அர்த்தம் இல்லாமல் ஆகிவிடும்.
சிங்கவர்களின் "ரணவிரு காய்ச்சல்" ஏற்கனவே தணியத் தொடங்கி இருக்குறது. சிப்பாய்களுடன் பொதுமக்கள் நேரடி வாய் தர்க்கத்தில் ஈடுபடுவதை தினசரி காண முடிகிறது.
இந்த பின்னணியில் இன்னும் சில மாதங்களை இதே போன்று கடத்துவது சாத்தியமற்றது. ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை சர்வேதேச சமூகத்தில் இருந்து நேரடியாக விடுக்கப்படா விட்டாலும் எல்லா "உதவி மறுப்புக்களும்" அதையேதான் சொல்லிச் செல்கின்றன.
இந்தியா இனிமேல் இலவசமாக எதையும் வழங்கும் போல் தெரியவில்லை. மக்களாலும் மேற்குலகத்தாலும் ஒதுக்கப்பட்ட ராஜபக்ஷ குடும்பத்தை தாங்கள் மட்டும் இனிமேல் தனியாக தாங்கிப் பிடிப்பதில் அர்த்தம் இல்லை என்று நினைத்திருக்கலாம். அவர்கள் கோத்தாவை கைவிடும் முடிவுக்கு வந்திப்பது போலவே தெரிகிறது.
இவ்வாறு அதிகரிக்கும் நெருக்கடிக்கு மத்தியில் " அதோ வருகிறது இதோவருகிறது " என்று இனிமேல் நீண்ட காலத்தை ஓட்ட முடியாது. எரிபொருள் என்பது எரியும் நெருப்பின் ஒரு பகுதி மட்டும்தான். எரிபொருள் பிரச்சினை தீர்ந்தாலும் இந்த விலைவாசிக்கு மத்தியில் மக்களால் இயல்பு வாழ்க்கை வாழ முடியாது. எனவே ஒரு நீடித்து நிலைக்கும் தீர்வு இல்லாமல் சற்றேனும் நம்பிக்கை அளிக்க கூடிய ஒரு அரசியல் கட்டமைப்பு உருவாகாமல், வெளிநாட்டு உதவிகள் வந்து சேராமல் இலங்கை இந்த ஆண்டை கடக்க முடியாது.
என்னதான் மேலோட்டமாக பூசி மெழுகிய அறிக்கைகள் விடப்பட்டாலும், IMF உடன் இலங்கையின் பேச்சுவார்த்தை உண்மையில் நற்றாற்றில் விடப்பட்டுள்ளது.
சர்வேதேச நாணய நிதியம் முவைக்கும் நிபந்தனைகளை நடைமுறை படுத்தும் சூழ்நிலை இலங்கையில் இல்லை . IMF உடன் "அதிகாரிகள் மட்டத்திலான" ஒரு உடன்படிக்கைக்கு வரவே இன்னும் பல மாதங்கள் எடுக்கும் போல் தெரிகிறது இலங்கைக்கு இந்த சூழ்நிலையில் கடன் வழங்க வேண்டாம் என்று IMF க்கு பல தரப்பில் இருந்தும் தொடர்ச்சியான கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன - இந்த நிலையில் எதிர்வரும் செப்டெம்பரில் நடக்கும் IMF நிறைவேற்று குழு கூட்டத்தில் இலங்கைக்கான கடன் உதவிக்கு அனுமதி கிடைக்கும் சாத்தியம் மிக மிக குறைவு.
அமைச்சர் அஹ்மத் நசீர் சவுதியில் தனது நண்பருடன் பேசிய ஒரு பெட்ரோல் கப்பலை கொண்டுவந்தாலும் இம்முறை கோத்தாவை காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.
அடுத்துவரும் நாட்களில் ஜனாதிபதி மீதான அரசியல் அழுத்தங்கள் அதிகரிக்கும் - நாட்டின் இன்றைய சூழ்நிலையில் விரல் விட்டு எண்ணக்கூடிய சில கழிசறைகள் தவிர கோதாவை அரசியல் ரீதியில் காப்பாற்ற நிறைய பேர் இல்லை. வீதியில் உள்ள கீழ் நிலை போலீஸ் மற்றும் ராணுவத்தினர் எந்த நேரத்திலும் மக்களுடன் சேர்ந்துகொள்ளும் வாய்ப்பு இருக்குறது. கோத்தா பதவி விலக வேண்டி வரும்.
ஒரு இடைக்கால அரசு தொடர்பில், அடுத்த கட்டத்தை முறையாக ஒழுங்கு படுத்துவது யார் என்ற கேள்வியும் - ஒரு இடைவெளியும் கொழும்பு அரசியலில் நிலவுகிறது. அனேகமாக சஜித், ஜேவிபி மற்றும் தமிழர் விடுதலை கூட்டணி உள்ளடங்கிய கட்சிகள் பாராளுமன்றத்தில் ஒரு உடன்பாட்டுக்கு வருவார்கள் என்றே நினைக்கிறேன். தவறும் பட்சத்தில் மக்கள் வீதிகளின் செத்து மடிவதை காணவேண்டி வரும். அந்த நிலை வருவதர்க்கு முன் பைத்தியம் தானாக பதவி விலகி ஒரு அனர்த்தத்தை தவிர்க்க உதவட்டும் என்று பிரார்த்திப்போம்...!