படுக்கை விரிப்பை திருடியவருக்கு மறியல்: தானிஷ் அலி உட்பட 7 பேருக்கு பிணை

zahir
By -
0


ஜனாதிபதி மாளிகையில் அத்துமீறி நுழைந்து பெட் சீட் திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (26) உத்தரவிட்டுள்ளது.

சந்தேக நபர் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

இதன்படி, கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே சந்தேக நபரை செப்டம்பர் 9 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளார்.

இதேவேளை ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தானிஷ் அலி உள்ளிட்ட 7 சந்தேக நபர்களை விடுதலை செய்ய கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

லஹிரு வீரசேகர மற்றும் சந்தேகநபர்கள் என பெயரிடப்பட்டுள்ள மற்றுமொரு சந்தேகநபர் இன்று (26) நீதிமன்றத்தில் ஆஜராகி தலா ஐந்து இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)