அபே ஜனபல கட்சியின் தலைவர் விளக்கமறியலில்

  Fayasa Fasil
By -
0



கைது செய்யப்பட்ட அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேரா ஒகஸ்ட் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஜூன் 5 ஆம் திகதி தங்காலை பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டு நபரொருவரைக் கொலை செய்து இருவரைக் காயப்படுத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு அடைக்கலம் கொடுத்த குற்றத்திற்காக அவர் கைது செய்யப்பட்டார்.

கொஸ்கொட பொலிஸ் பிரிவில் தங்காலை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அவர், தங்காலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர், விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)