பொத்துவிலில் சமுர்த்தி தொழில் முயற்சியாளர்களுக்கான ஐந்து நாள் வேலைத்திட்டம்

zahir
By -
0




(இஸட்.ஏ.றகுமான்)

பொத்துவில் பிரதேச செயலகத்தின் சமுர்த்தி தொழில் முயற்சியாளர்களுக்கான ஐந்து நாள் பயிற்சி வேலைத்திட்டத்தின் முதல் நாள் நிகழ்வு நேற்று தலைமைப் பீட சமுர்த்தி முகாமையாளர் ஏ.எல். நௌபீர் தலைமையில் இடம்பெற்றது. 



யூலீட் திட்டத்தின் அனுசரணையிலும் இலங்கை சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் வழிகாட்டலிலும் நடைபெறும் இவ்வேலைத் திட்டத்தின் வளவாளர்களாக அக்கரைப்பற்று தலைமைப் பீட சமுர்த்தி முகாமையாளர் எம்.பீ.எம்.ஹுசைன்;, மாவட்ட சமுர்த்தி கணக்காய்வு அலகின் பிரிவுப் பொறுப்பாளரும் சிரேஷ்ட முகாமையாளருமான இஸட். ஏ. றஹுமான் ஆகியோர்; கலந்து கொண்டனர். 

நிகழ்வில் பொத்துவில் வங்கிச் சங்க முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ.எல். றபீக், கருத்திட்ட முகாமையாளர் எழிலரசன், கருத்திட்ட உதவி முகாமையாளர் என்.ரி. முஸம்மில் ஆகியோரும், பிரிவு சமுர்த்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.






கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)