(ஹஸ்பர்)
திருகோணமலை, தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியில் உள்ள சமுர்த்தி திணைக்களம் ஊடாக புதிய வீட்டு நிர்மாணத்திற்கான அடிக்கல் நடும் வைபவம் இடம்பெற்றது.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதியின் வழிகாட்டுதளுக்கிணங்க நேற்று (24) குறித்த வீட்டுத் திட்ட நிர்மாணிப்புக்கான அங்குரார்ப்பண வைபவம் இடம்பெற்றது. மீரா நகர், சிராஜ் நகர் கிராம உத்தியோகத்தர் பிரிவில் தலா ஆறு இலட்சம் ரூபா செலவில் புதிய வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. சமுர்த்தி விசேட வீட்டுத் திட்டத்தின் கீழ் உரிய பயனாளிகளுக்கு இது புனர் நிர்மானம் செய்து கொடுக்கப்படவுள்ளது
இதில் சமுர்த்தி தலைமை முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சித்திக், வங்கி முகாமையாளர் எம்.ஏ.ஹிஸ்புள்ளா, திட்ட உதவியாளர் எம்.ஏ.எம்.நஜீப் உட்பட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பயனாளிகள் என பலர் கலந்து கொண்டனர்.