திருமலையில் பன்மைத்துவக் கலாசாரத்தினூடாக மரபுரிமையை வளர்த்தலும் மதநல்லிணக்கத்தினை வலுப்படுத்தலும் எனும் தொனிப்பொருளில் நிகழ்வு

zahir
By -
0


(ஹஸ்பர்)

பன்மைத்துவக் கலாசாரத்தினூடாக மரபுரிமையை வளர்த்தலும் மதநல்லிணக்கத்தினை வலுப்படுத்தலும் என்ற தொனிப்பொருளில் திருகோணமலை சர்வமத இளையோர்களின் ஒழுங்கமைப்பில் (26) சீனக்குடா - கவட்டிக்குடா ,கிராம சேவகர் பிரிவு அலுவலகத்தின் திறந்தவெளியில் இடம்பெற்றது. 



இதில் சர்வமதத்தின் மதத்தலைவர்கள், சீனக்குடா மதத்தலங்களுக்குப் பொறுப்பான நிர்வாகசபை மற்றும் கவட்டிக்குடா கிராம சேவகர் அதிகாரி, அமரா சமாச உறுப்பினர்கள், சீனக்குடா பொதுமக்கள், இளையோர்கள், அத்துடன் திருகோணமலை முஸ்லிம் அறநெறிப் பாடசாலை, சீனக்குடா இந்துசமய அறநெறிப்பாடசாலை, பௌத்த அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் இதில் பங்கேற்று தமது பூரண ஒத்துழைப்பினை வழங்கி இந்நிகழ்வினை சிறப்பித்திருந்ததோடு, உணவு பாரம்பரித்தின் அவசியம், ஒவ்வொரு சமயங்களும் உணவிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தினை இந்நிகழ்வு பறைசாற்றியது என்பதற்கு மாற்றுக்கருத்தில்லை. 



இத்தகைய நிகழ்வினை உரியநேரத்தில் ஒழுங்கமைந்த முறையில் மேற்கொள்ள ஒன்றுசேர கைகோர்த்த அனைவருக்கும் விழுது சர்வமத இளையோர் சார்பாகவும், ஒழுங்கமைப்புக்குழு சார்பாகவும் நன்றியினைத் தெரிவித்து கொள்கின்றனர்.








கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)