திருமலை வெள்ளைமணல் தி/அல்-அஸ்ஹர் முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு கதிரைகள் கையளிப்பு

zahir
By -
0


(ஹஸ்பர்)

திருகோணமலை வெள்ளைமணல் தி/ அல்-அஸ்ஹர் முஸ்லிம் மகா வித்தியாலய அதிபர் அமீன், பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் பழைய மாணவர் சங்கங்கள் பாடசாலைக்கு மிக நீண்ட கால தேவையாக காணப்படும் பல்லூடக அறைக்கு கதிரைகள் பெற்றுத் தருமாறு திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை உப தவிசாளர் முகமட் நௌபரிடம் எழுத்து மூலமான கோரிக்கையினை முன்வைத்திந்தனர்.



அவர்களின் கோரிக்கைகளுக்கு அமைவாக நேற்று (24) பாடசாலையின் பல்லூடக அறைக்கு சுமார் 40  பிளாஸ்டிக் கதிரைகள் வெள்ளைமணல் சனசமூக நிலையத்தின் பங்களிப்புடன் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை உப தவிசாளர் முகமட் நௌபரினால் பாடசாலை அதிபர் அமீனிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.



இந் நிகழ்வில் பிரதி அதிபர், உப அதிபர், ஆசிரியர்கள், வெள்ளைமணல் சனசமூக நிலைய நிர்வாகிகள், பாடசாலை அபிவிருத்திச் சங்க நிர்வாகிகள், பழைய மாணவர் சங்க நிர்வாகிகள், பெற்றோர்கள் மாணவர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)