Artemis-I இம்மாதம் சந்திரனுக்கு திரும்பச் செல்லும் NASA

zahir
By -
0

(ஹரீஸ் ஸாலிஹ்)



கூடிய சீக்கிரம் சந்திரனில் குடி கொண்டு அங்கு தங்கி இருந்து கொண்டு விண்வெளி ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் மிக நீண்ட கால நிகழ்ச்சி நிரலை  கடந்த 50 வருடங்களாக NASA  திட்டமிட்டுக்கொண்டு வருகிறது.

2025 ஆம் ஆண்டில் மனிதனை சந்திரனில் குடியிருக்க வைக்கும் நாசாவின் மிக நீண்ட கால திட்டமான 'Artemis  Program' ன் முதல் கட்டமாக இவ்வருடம் ஆகஸ்ட் 29 ஆம் திகதி  'Artemis-1'  இனது ஆளில்லா ORION விண்கலம் சந்திரனுக்கு செல்ல இருக்கிறது.




'Artemis  Program' இன் பிரதான கட்டங்கள் மூன்று :

1) Artemis I   - 2022 ஆகஸ்ட் 29 சந்திரனை சுற்றி வரும் ஆளில்லா பயணம்.
 
2) Artemis II  - 2024, சந்திரனை சுற்றி வரும் விண்வெளி வீரர்கள்.
 
3) Artemis III - 2025, விண்வெளி வீரர்களை சந்திரனின் மேற்பரப்பில் இறக்குதல்.

இம்மாதம் 'Artemis I' இனது ஆளில்லாத பயணத்தின் போது  NASA வின் SLS (Space Launch System - super heavy-lift launch vehicle) மற்றும் 'ORION' விண்கலம் ஆகிய இரண்டும் முதல் முறையாக பரீட்சிக்கப்படும். 'Artemis I' இனது  பிரதான நோக்கம் 'ORION' விண்கலத்தை சந்திரனது ஓடுபாதையை (Lunar Orbit) அடையச் செய்துவிட்டு திரும்ப    பூமிக்கு கொண்டு வருவதாகும்.

2024 ஆம் ஆண்டு 'Artemis II' பயணத்தின் போது நான்கு விண்வெளி வீரர்களை  கொண்ட 'ORION' சுமார் 21 நாட்களுக்கு சந்திரனை அண்மித்து சுற்றி வரும்.

2025 ஆம் ஆண்டு அடுத்த கட்டமாக 'Artemis III' சந்திரனில் மனிதர்களை இறக்கும் பணியைச் செய்யும்.

'Artemis Program' என்பது 2025ஆம் ஆண்டுக்குள் சந்திரனின் தென் துருவத்தில் முதல் விண்வெளி வீராங்கனையையும்,  13 ஆவது விண்வெளி வீரரையும் சந்திரனில் இறக்கும் நோக்குடன் NASA வினால் செயற்படுத்தப்பட்டு வரும் மிக நீண்ட கால விண்வெளிப் பயணத் திட்டமாகும். 1969 ஆம் ஆண்டு Apollo 11 விண்வெளிப் பயணத்தினூடாக சந்திரனுக்கு முதல் மனிதனை அனுப்பி சுமார் 53 ஆண்டுகளுக்குப் பிறகு NASA வின் 'Artemis I'  சந்திரப் பயணம் நெருங்கி வந்து கொண்டிருக்கிறது.




Artemis  Program ஊடாக  சந்திரனில் மனிதர்கள் தங்கியிருந்து கொண்டு விண்வெளி ஆராய்ச்சிகளை  மேற்கொள்வர். இது செவ்வாய் கிரகத்துக்கு செல்லும் அடுத்த படியாக இருந்து பேருதவி செய்யும். எதிர்காலத்தில் சந்திரனில் தரையிறங்கும் வாகனங்களை வடிவமைக்கும் பொறுப்பை SpaceX, Blue Origin, மற்றும் Dynetics ஆகிய நிறுவனங்களுக்கு NASA வழங்கியுள்ளது.

2019 January 3 ஆம் திகதி மனித வரலாற்றில் முதன் முறையாக .சீனாவின் Chang'e-4  விண்கலம் நிலவின் இருண்ட பக்கத்தில் (சந்திரனின் மனிதன் காணாத பக்கம்) இறங்கியது. வெற்றிகரமான இத்தரையிறக்கம் சீனாவின் ஒரு முக்கிய தொழில்நுட்ப சாதனையாக பாராட்டப்படுவதுடன் சீனாவின் பரந்த விண்வெளி அபிலாசைகளை நோக்கிய ஒரு முக்கியமான நடவடிக்கையாகவும் கருதப்படுகிறது. இந்த பயணத்தின் போது பூமியிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட பருத்தி மற்றும் உருளைக்கிழங்கு விதைகள் சந்திரனில் முளைத்தது இன்னொரு சாதனையாகும். சந்திரனில் ஒரு உயிரியல் பொருள் வளர்ந்தது இதுவே முதல் முறையாகும். நீண்ட கால விண்வெளி ஆய்வுக்கான குறிப்பிடத்தக்க படியாக இது பார்க்கப்படுகிறது.




2019 February 22 ஆம் திகதி இஸ்ரேல் சந்திரனுக்கு அனுப்பிய 'Beresheet' விண்கலம் தோல்வி அடைந்ததை தொடர்ந்து 'Beresheet-2' வை 2024 ஆம் ஆண்டு திரும்ப நிலவுக்கு அனுப்பும் முயற்சியில் இஸ்ரேல் செயற்பட்டுக்கொண்டு வருகிறது.




2019 September 6 ஆம் திகதி ISRO’s வினது 'Chandrayaan 2' நிலவில் இறங்க இருந்து கடைசி நேரத்தில் விபத்துக்கு  உள்ளாகி தோல்வியில் முடிவுற்றதால் 'Chandrayaan 3' யை 2023 ஆம் ஆண்டு திரும்ப நிலவுக்கு அனுப்பும் முயற்சியில் இந்தியா கவனம் செலுத்திக்கொண்டு வருகிறது.




இதே போல் சீனா, ரஷ்யா போன்ற நாடுகளும் சந்திரனில்  ஆராய்ச்சி நிலையங்கள் அமைக்க திட்டமிட்டுள்ளன.




கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)