பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு செப்டெம்பர் 1ஆம் திகதி வரை பிணை வழங்கி இஸ்லாமாபாத் மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக பயங்கரவதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய இம்ரான்கான், பொலிஸ் உயர் அதிகாரிகளையும் பெண் நீதிபதியை மிரட்டும் வகையில் பேசியதாக இம்ரான்கானுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது.
இதைத் தொடர்ந்து இம்ரான்கான் எப்போது வேண்டும் என்றாலும் கைதாகக் கூடும் என்று பாகிஸ்தானில் பரபரப்பு நிலவியது.
இந்த நிலையில், கடந்த 22ஆம் திகதி இஸ்லாமாபாத் மேல்நீதிமன்றம் இம்ரான்கானுக்கு 3 நாள் முன் பிணை வழங்கியது. அவருக்கு வழங்கப்பட்ட முன் பிணை இன்றுடன் நிறைவடைவதையடுத்து அவர் கைது செய்யப்படுவார் என தகவல் வெளியானது.
இந்த நிலையில், இம்ரான்கானுக்கு வழங்கப்பட்ட முன் பிணை நீட்டித்து இஸ்லாமாபாத் மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எதிர்வரும் செப்டெம்பர் 1ஆம் திகதி வரை பிணை வழங்கி மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.